பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கல்லூரி மாணவி மனவேதனையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காடூர் கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் இருந்தார். ஆர்த்தி இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பை வேப்பூரில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கு ஆர்த்தி, தனக்கு திருமணம் செய்து கொள்ள தற்போது விருப்பமில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவரை திருமணம் செய்ய பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் ஆரத்தி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் ஆர்த்தி மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.