Categories
உலக செய்திகள்

“வேண்டாம்! இதனை செய்யாதீர்கள் “… கெஞ்சும் குடும்பம்… கனடாவின் முடிவு என்ன…?

கனடாவில் வசிக்கும் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த குடும்பம் நாட்டை விட்டு வெளியேற்றாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 

கனடாவில் உள்ள மில்டன் என்ற பகுதியில் கடந்த 2012 ஆம் வருடத்திலிருந்து போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று வரும் 11ம் தேதி அன்று கனடாவிலிருந்து இக்குடும்பம் வெளியேற்றப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குடும்பத்தினர் தற்போதிருக்கும் சூழ்நிலையில் எங்களை வெளியேற்றாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு கொரோனாவின் ஆபத்தான சூழ்நிலையில் எங்களை அனுப்பினால், போர் நடைபெறும் பகுதிக்கு அனுப்புவதை போல அபாயகரமானது என்று கடந்த எட்டு வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வரும் அக்குடும்பத்தில் உள்ள ferreira என்ற பெண் கூறியுள்ளார். இவர் தன் 15 வயது மகன் மற்றும் கணவருடன் வாழ்ந்து வருகிறார்.

அதாவது ஒவ்வொரு நாளும் போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா அபாயம் அதிகமாகி வருவதால் கனடா அரசின் இந்த செயல் எங்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ferreira, கனடாவை நாங்கள் மிகவும் நேசிப்பதாகவும் தொடர்ந்து கனடாவிலேயே வசிப்போம் என்று நம்புவதாகவும் இப்போது உள்ள சூழ்நிலையில் காலத்தை கடந்து விட்டோம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இக்குடும்பத்தை நாட்டில் இருந்து வெளியேற்ற தடை செய்யக்கோரி jackulin swaiasland என்ற வழக்கறிஞர் வழக்கு தொடரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |