தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் 21ஆம் தேதி கடலோர பகுதிகளில் 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை சூறைகாற்று வீச கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கொடுத்துள்ளனர். மேலும் ஆழ்கடல் மீன்பிடி பகுதிகளில் உள்ள மீனவர்களை அரசு தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன் பிடித் துறைமுகங்களில் தங்களுடைய படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளது.
Categories