நடிகை சமந்தா, நாக சைதன்யா குடும்பத்தினர் அளிக்க முன் வந்த ரூ 200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது..
பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகிறது.
அதே சமயம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே திருமணத்திற்கு பின் ட்விட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட வலைதள பக்கத்தில் ரூத் பிரபு என்று பெயர் வைத்திருந்த சமந்தா அதை எடுத்து விட்டு நாகார்ஜுனாவின் குடும்ப பெயரான சமந்தா அக்கினேனி என்று வைத்திருந்தார்..
இந்நிலையில் கடந்த மாதம் அக்கினேனியை நீக்கிவிட்டு S மட்டும் வைத்திருந்தார். இதனால் நாக சைதன்யா மற்றும் சமந்தா இடையே பிரச்சினை இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.. மேலும் அவரது மாமனார் நாகர்ஜுனா பிறந்த நாளிலும் பங்கேற்கவில்லை.. அமீர்கானுக்கு நாகர்ஜுனா குடும்பத்தினர் வைத்த விருந்திலும் சம்பந்த பங்கேற்காததால் இருவரும் விவாகரத்து செய்யபோகிறார்களா? என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இது பற்றி உண்மையான அதிகார்வ பூர்வ தகவல் வெளியாகாமல் இருந்தது..
இந்த சூழலில் நேற்று கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.. அதேபோல சமந்தாவை பிரிவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் நாக சைதன்யாவும் அறிவித்தார்.. அதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சமந்தா ரூத் பிரபு’ என்று மாற்றம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நாக சைதன்யாவுடன் விவகாரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா, அவர்கள் குடும்பத்தினர் அளிக்க முன் வந்த ரூ 200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது..
மேலும் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக படப்பிடிப்புகள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் சமந்தா உறுதியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.