Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேண்டும்…. வேண்டும்… 100 நாட்களும் வேலை வேண்டும்…. விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!!

அன்னவாசல் ஊராட்சியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடத்தபட்டது. ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ஆறுமுகம், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் சண்முகம், மாநில குழு உறுப்பினர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் விவசாய தொழிலாளர்கள் காலை 7 மணிக்கெல்லாம் வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். எனவே அவர்கள்  9:00 மணிக்கு வரும்படியாக மாற்றி தர வேண்டும் மற்றும் சட்ட கூலி ரூ 273யை  முழுமையாக கொடுக்க வேண்டும். அன்னவாசல், இலுப்பூர் பேரூராட்சியில் உடனடியாக நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும். பெரிய ஊராட்சிகளில் இதுவரை 40 நாள் முதல் 55 நாட்கள் தான் வேலை பார்க்கின்றனர். அதை சுழற்சிமுறை இல்லாமல் தொடர்ந்து 100 நாள் வேலையை கொடுக்க வேண்டும்.

மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் 50 பேருக்கு மட்டும் வேலை என்பதை மாற்றி அமைக்கும் வகையில் அனைவருக்கும் நூறு நாள் வேலை என்பதை அமல்படுத்த வேண்டும் மற்றும் சம்பளத்தை  பாக்கி இல்லாமல் உடனே  தரவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்,பெண்கள் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |