Categories
சினிமா தமிழ் சினிமா

வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது…. செல்வராகவன் கொடுத்த சூப்பர் அட்வைஸ்…!!!

நடிகரும், பிரபல இயக்குனருமான செல்வராகவன் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவர் தன்னுடைய படங்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது பொதுவாகவும் ஏதாவது கருத்து தெரிவித்து வருபவர். மன அமைதி, நிம்மதிக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் ஏதாவது ட்வீட்  செய்வார்.  அவர் அண்மையில் ஒரு ட்வீட் போட்டார். அதில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மனதை குத்திக் கிழித்து உடைத்து சுக்கு நூறாய் போட்ட காதல் ஒன்றும் இல்லாமல் இருக்காது என்று தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் சோனியா சோனியா அகர்வாலை பற்றி பேசுகிறார் .காதல் அனுபவம் இருப்பவர்கள் கரெக்டா சொன்னீங்க வேதனை தாங்களே என்று கூறி வந்தனர்.  இந்த நிலையில் செல்வராகவன், தயவுசெய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது எந்த முடிவும் எடுக்காதீர்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உறங்கி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு பிரச்சினையும்  இருக்காது. இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |