மேட்டூர் சரபங்கா திட்டம் எந்த விதத்தில் மேட்டூர் பாசன விவசாயிகள் பாதிக்காது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பான அரசாணை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்திருக்கிறது. மேட்டூர் சரபங்கா நீர்யேற்று திட்டம் 565 கோடியில் அமைய இருக்கின்றது. இந்தத் திட்டத்திற்கு கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலமாக வறண்ட நீர் நிலைகளுக்கு நீர் திருப்பி விடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் இந்த திட்டம் மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்கும் என்றும், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மேட்டூர் சரபங்கா திட்டம் எந்த விதத்திலும் மேட்டூர் பாசன விவசாயிகளை பாதிக்காது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.