Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேதனை தரும் இழப்பு…. “வலுவாக மீண்டும் வருவோம்”….. சூர்யகுமார் யாதவ் ட்விட்..!!

நாங்கள் பிரதிபலிப்போம் & வலுவாக மீண்டும் வருவோம் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்..

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பிய போதிலும் விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் 6  விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது.. அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியால் ஒரு விக்கெட் கூட இழக்காமல் 170 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து. இந்த தோல்வியை இந்திய அணி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்திய அணி வெற்றிபெற்று பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இதனால் இந்திய அணியின் மீது விமர்சனம் எழுந்துள்ளது. சில ரசிகர்கள் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இப்படி மட்டமாக தோற்று விட்டார்களே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் இருப்பினும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், வேதனை தரும் இழப்பு.
நாங்கள் எங்கு விளையாடினாலும் பரவசமான சூழலை உருவாக்கும் எங்கள் ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அணி மற்றும் ஆதரவு ஊழியர்களின் கடின உழைப்புக்கு பெருமை, ஒருவருக் கொருவர் இடைவிடாத ஆதரவுக்கு நன்றி. எனது நாட்டிற்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன். நாங்கள் பிரதிபலிப்போம் & வலுவாக மீண்டும் வருவோம் என்று தெரிவித்துள்ளார்..

இந்த டி20 உலக கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் 2022 டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் (239) அடித்தவர் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார். துரதிஷ்டவசமாக நேற்றைய போட்டியில் 14 ரன்களில் அவுட் ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும் எல்லா போட்டியிலும் ஒருவரை மட்டுமே நம்பி அணி இருக்கக் கூடாது என்றும், அவர் சிறப்பாக இந்த தொடரில் ஆடினார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |