வேதாரண்யத்தில் பலத்த மழை மற்றும் கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம்,புஷ்பவனம் ஆகிய 10-திற்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேல் பைபர் படகுகள் உள்ளன .இதில் 5,000 திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் . எனவே இப்பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கடலில் சூறைக்காற்று வீசுகிறது .
இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதைத் தொடர்ந்து, கடல் சீற்றத்தின் காரணமாக பைபர் படகுகளை கரையோரத்தத்தில் பாதுகாப்பாக நிறுத்தி -வைத்துள்ளனர். மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவ்வூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர் .