நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் வீற்றியிருக்கும் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 30-ஆம் தேதி இந்த கோவிலில் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மணிகர்ணிகை தீர்க்க குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
Categories