வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறாமல் மீண்டும் அடம்பிடிக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்காவில் தேர்தல் முடிந்தும் இன்னும் அதிபர் சச்சரவு முடிவுக்கு வரவில்லை. நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜோதிடம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் இந்த தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றத்தை நாடினார். ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் வென்றதை மறுபடியும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறினார்.
அதில் ஜோ பைடன் மறுபடியும் வென்றது உறுதிப்படுத்தப்பட்டது. பிறகு சிறிது இறங்கிவந்த ட்ரம்ப் அதிகார மாற்றங்கள் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை போல் வெள்ளை மாளிகையை விட்டு எப்போது வெளியேறுகிறார்கள் என்று கேட்டதற்கு தேர்தல் குழு இறுதியாக அதிபர் யாரென தேர்வு செய்ததும் வெளியேறுவேன் என்று சொல்லியுள்ளார். அமெரிக்க தேர்தல் முடிவு என்பது மிகவும் வித்தியாசமானது.
ஒவ்வொரு மாகாணத்திற்கு இத்தனை எலக்டரால் காலேஜ் வாக்குகள் உள்ளன. அந்த மாகாணத்தில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிக்கு அந்த மாகாணத்திலுள்ள உள்ள எலக்டரால் காலேஜ் வாக்குகள் சென்றுவிடும். பிடிவாதம் பிடித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்திய அந்த மாகாணத்தில் ஜோ பைடன் வென்றது உறுதியானது. அதிபராக 270 வாக்குகள் தேவைப்படும். ஆனால் ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்றுள்ளார்.
டிரம்ப் 232 வாக்குகளே பெற்றுள்ளார். எனவே இந்த எலக்டரால் காலேஜ் வாக்காளர்களே அதிபரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் ‘அந்த தேர்வு குழு அறிக்கை வெளியிட்ட உடனே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்’ என்று மீண்டும் அடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார் டோனால்ட் டிரம்ப்.