Categories
மாநில செய்திகள்

வேதா இல்லம்…. அதிமுக தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா நிலையம் வீட்டை நினைவிடமாக அறிவிக்கும் வகையில் அரசுடைமையாக்கி கடந்த அதிமுக ஆட்சி சட்டம் இயற்றியது. அதனை எதிர்த்து ஜெ. தீபா மற்றும் தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையில் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்று உத்தரவிட்டது. மேலும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபாவிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் வேதா இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவு ரத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சக்திகுமார் சுகுமார குரூப் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிலம் கையகப்படுத்துதலில் உள்ள நடைமுறைகளில் தவறுகள் உள்ளது. மேலும் வேதா இல்லம் பொது நோக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை இன்று அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

Categories

Tech |