வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் உத்தரவை ரத்து செய்ததை தொடர்ந்து அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வேண்டும் என்று கோரி திமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளதாவது: “மேல்முறையீடு செய்ய மாநில அரசு அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல் முறையீடு செய்துள்ளேன்.
நினைவில்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் போன்ற தனி நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றவை. இந்த உத்தரவு அதிமுக தொண்டர்களை புண்படுத்தியுள்ளது. எனவே மேல்முறையீடு அனுமதி அளிக்க வேண்டும். வேதா இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைத்தால் அதிமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.