வேதா நிலையம் விவகாரத்தில் வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்துவந்த இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்து கொடுக்கும் விவகாரத்தில், தீபக்,தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் வேளாண் நிலையத்திற்கு 68 கோடி ரூபாய் இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாஸிட் செய்துள்ளது.
இந்நிலையில் வருமான வரி பாக்கியை வழங்க வேண்டும் என்று கோரி வருமான வரித்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதுபற்றி நவம்பர் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.