வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் பட்டியலில் இரண்டு பெண்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.
உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகிய இரு பெண்களுக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் மரபணு சார்ந்த ஆராய்ச்சி செய்த காரணத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.