சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையில் போது காவல் துறையினரால் பறிமுதல் செயபய்யப்ட்ட 5 கோடி பணம் ஆவணம் காட்டியதால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் கண்காணிப்புக்குழு அன்புராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 5 கோடி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த வேனில் வந்தவர்களிடம் நிறுத்தி விசாரணை நடத்திய போது அவர்கள் வங்கி ஊழியர்கள் என்றும் அந்த பணத்தை ஓசூரில் இருந்து திருச்சி வங்கிக்கு கொண்டு செல்வதும் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது . மேலும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் கொண்டு சென்றதால் அதிகாரிகள் வங்கி தலைமை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பணத்திற்குரிய உரிய ஆவணங்களை வங்கி தலைமை அதிகாரிகள் பேஸ்புக் மூலம் ஊழியருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு கண்காணிப்பு குழு அலுவலரிடம் வங்கி ஊழியர் அந்த ஆவணத்தை காண்பித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பணத்திற்குரிய உரிய ஆவணத்தை சரிப்பார்த்த பிறகு தேர்தல் அதிகாரிகள் வங்கி ஊழியரிடம் பணத்தை ஒப்படைத்தது அனுப்பிவைத்தனர்.