Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேன் கட்டணம் செலுத்தாதது ஏன்?…. பெற்றோரின் முகத்தில் மகனின் மாற்றுச் சான்றிதழை வீசிய பள்ளி தாளாளர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பள்ளி மாணவனுக்கு வேன் கட்டணம் செலுத்தாததால் மாற்றுச்   சான்றிதழ் வழங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சாலைப்பட்டி பகுதியில் ரவிச்சந்திரன்-கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சித்திஸ்வரன் என் மகன் உள்ளார். இந்நிலையில் சித்தீஸ்வரன் முசிறி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2-ஆம்  வகுப்பு படித்து வந்துள்ளார். இதனால் கடந்த 20- தேதி சித்தீஸ்வரனின் பெற்றோர் பள்ளியில் 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக கட்டியுள்ளனர். ஆனால் வேணுக்கான ரூ. 400 ரூபாய் கட்டணம் கட்டவில்லை. இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை சித்தீஸ்வரனை வேன் ஓட்டுநர் வேனில் ஏற்ற மறுத்துள்ளார்.

இதுகுறித்து சித்தீஸ்வரனின் பெற்றோர் பள்ளி தாளாளரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர் சித்தீஸ்வரன் பெற்றோரை தரக்குறைவாக பேசியதோடு மட்டும் இல்லாமல் சித்திஸ்வரனின் மாற்றுச்  சான்றிதழைய அவரது  பெற்றோர் முகத்தில் வீசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் துணை சூப்பிரண்டு  அருள்மணி இருதரப்பினரிடம் விசாரணை நடத்தினார். அப்போது சித்தீஸ்வரனின் பெற்றோர் கூறியதாவது. எங்கள் மகனை இந்த பள்ளியில் படிக்க வைக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே நாங்கள் செலுத்திய அனைத்து பணத்தையும் திரும்பி தர வேண்டும். மேலும் பள்ளியின் தாளாளரை மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |