வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நூம்பல் பகுதியில் இருக்கும் தனியார் ஷூ தயாரிக்கும் கம்பெனியில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த கம்பெனியில் பணிபுரியும் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை முடிந்து வேனில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே மாடுகள் நின்றதால் எதிரே வந்த அரசு பேருந்தின் ஓட்டுனர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பிவிட்டனர். இதனை பார்த்த பொதுமக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.