Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேன் மீது மோதிய கார்…. பள்ளி தாளாளர் பலி; ஆசிரியர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாசிபட்டினம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருந்து மனோராவை சுற்றி பார்க்க பள்ளி தாளாளர் செய்யது முகமது, ஆசிரியர்கள் கார்த்திகா, சந்தியா, 6 பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை செய்யது முகமது ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வலது புறமாக மனோராவிற்கு திரும்பிய போது மணமேல்குடி நோக்கி வேகமாக சென்ற கார் நிலைத்தடுமாறி வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பள்ளி தாளாளர், கார்த்திகா, சந்தியா ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செய்யது முகமது பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்தில் மாணவ மாணவிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |