Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்…. இன்ஜினியர் உள்பட 2 பேர் பலி…. குமரியில் கோர விபத்து…!!

வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இன்ஜினியர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னங்காடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ரமேஷ்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பரான சுபாஷ்(32) என்பவருடன் பிளாஸ்டிக் கேனில் குடிநீர் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இரணியல் மேலத்தெரு சந்திப்பு பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் மற்றும் சுபாஷ் ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |