சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வேன் ஓட்டுநர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, 10 கேள்விக்கு 2 நாட்களில் பதிலளிக்கும்படி தனியார் பள்ளி தாளாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது காவல்துறை..