வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனபள்ளியில் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக மாற்று திறனாளிகள் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து உடன்பாடு ஏற்பட்ட பின் போராட்டத்திலிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.