Categories
தேசிய செய்திகள்

வேப்பமரத்தில் சடலமாக தொங்கிய புதுமண ஜோடி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

திருமணமான இரண்டே மாதத்தில் புதுமணத் தம்பதி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹனியா கிராமத்தை சேர்ந்தவர் ஜீத்து(25). இவருக்கும் அர்ச்சனா என்ற பெண்ணிற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்னதாக வேப்பமரத்தில் ஜீத்துவும், அர்ச்சனாவும் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளனர். இரவு நேரத்தில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் கிராம மக்கள் காலையில் வந்து பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். இதனை அடுத்து காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்த பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், புதுமண தம்பதியினர் இருவரும் தங்களுடைய மாமாவின் வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளனர். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது அர்ச்சனாவின் நகை திருடு போய்விட்டது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அர்ச்சனா கவனக்குறைவாக இருந்ததாக கூறி அவரிடம் ஜீத்து வாக்குவாதம் செய்துள்ளார். இதன் காரணமாக இருவரும் மனவருத்தம் அடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இருவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |