Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் நடத்திய கிராம மக்கள்…. மழை வேண்டி வினோத வழிபாடு…!!

மழை பெய்ய வலியுறுத்தி கிராம மக்கள் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரியாண்டிகுளம் கிராமத்தில் புகழ்பெற்ற வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வளாகத்தில் அரச மரக்கன்றை நட்டு வைத்து பராமரித்து வந்துள்ளனர். சில நாட்களில் அதன் அருகில் வேப்ப மரக்கன்று தானாக வளர்ந்தது. பின்னர் இரண்டு மரங்களும் ஒன்றாக பின்னிப்பிணைந்து வளர்ந்ததால் கிராம மக்கள் 2 மரங்களையும் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மழை பெய்ய வலியுறுத்தியும், உலக நன்மைக்காகவும் அரசமரம் மற்றும் வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வழிபாடு நடத்த கிராம மக்கள் முடிவெடுத்தனர். அதன்படி திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. பின்னர் சுபமுகூர்த்த நாளான நேற்று வேப்ப மரத்துக்கும், அரச மரத்துக்கும் பட்டு வேஷ்டி, சேலை கட்டி மேளதாளங்கள் முழங்க திருமணம் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் கிராம மக்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்து பரிமாறப்பட்டது.

Categories

Tech |