ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ் செல்லும் வழியில் பல ஏக்கர் பரப்பளவிலான சின்னகுளம் அமைந்துள்ளது. இதன் கரையில் இருக்கும் வேப்பமரத்தில் கடந்த ஒரு வாரமாக பால் வடிந்ததை அறிந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு சென்று வேப்ப மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். இதனையடுத்து வேப்ப மரத்திற்கு மஞ்சள் துணி கட்டி மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, வெள்ளோட்டில் இருக்கும் புகழ்பெற்ற மாரியம்மனின் கோவிலில் கடந்த வாரம் பொங்கல் விழா நடைபெற்றது. அதன் பின்னர் மரத்தில் பால் வடிவதால் இது அம்மனின் அருளாக இருக்கும் என நம்புகிறோம். சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் ஏராளமான மக்கள் வேப்ப மரத்தை தரிசித்து சொல்கிறார்கள் என கூறியுள்ளனர்.