பள்ளிகொண்டா அருகில் வேர்க்கடலை பறித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகையை வாலிபர் ஒருவர் பறித்து சென்று விட்டார்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் அகரம்சேரி எஸ்.என் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(65). இவர்கள் பள்ளிக்குப்பம் சாலையில் உள்ள நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ரங்கசாமி குடும்பத்துடன் நிலத்தில் வேர்க்கடலை பறித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக டிப்டாப்பாக ஆடையணிந்து 25 வயதுள்ள வாலிபர் ஒருவர் பைக்கில் வந்து வேர்கடலை பறித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரிடம் வேர்கடலை விலைக்கு கொடுப்பீங்களா என்று பேச்சுக் கொடுத்தார். இதையடுத்து அந்த வாலிபர் எதிர்பாராதவிதமாக திடீரென்று ராஜேஸ்வரி கழுத்தில் போட்டிருந்த 6 பவுன் நகையே திருடிவிட்டு அதிவேகத்தில் பைக்கில் தப்பித்து சென்று விட்டார். இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நகையை பறித்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.