Categories
தேசிய செய்திகள்

வேறலெவலுங்க…. மருத்துவ செலவுக்கு ரூ40,00,000 வரை உடனடி கடன்…. பிரபல வங்கி அறிவிப்பு….!!

மருத்துவ செலவுக்கான சிறப்பு கடன் வசதியை எச்டிஎஃப்சி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்தியாவைப் பொருத்தவரையில் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களின் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் சேமித்து வரக்கூடிய பணத்தை திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, பெரிய பெரிய ஆபரேஷன்களுக்கு அத்தனையையும் தண்ணியாக  செலவழிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

பெரும்பாலானோர் பணமில்லாத ஒரே காரணத்தினால் சிகிச்சை பெறமுடியாமல் மரணித்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். இந்த சாபத்தில் இருந்து விடுபடுவதற்காக அரசு சார்பில் மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த காப்பீடு திட்டத்தை  பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்நிலையில் எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்களின் மருத்துவ செலவுக்காக ரூபாய் 40 லட்சம் வரை உடனடி கடன் வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்த பிறகு, விண்ணப்பித்தால் உடனடியாக கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

Categories

Tech |