பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சகட்ட அளவில் உள்ளது. அவ்வகையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இல்லாத அளவிற்கு நேற்று மட்டும் 60,486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 16,61,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 828 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 39,865 ஆக உயர்ந்துள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் நாட்டில் இரண்டாவது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.