Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கனூர் கிராமத்தில் இளங்கோவன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் இளங்கோவனின் மனைவி தனது மகளுடன் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவருடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளங்கோவன் தனது மனைவி மற்றும் குழந்தையை மீட்டு தருமாறு மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் இளங்கோவன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தினர் இளங்கோவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |