கடந்த வெள்ளிக்கிழமை 356 பயணிகளுடன் லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்திற்கு செல்ல இருந்த விமானம் ஒன்று அசர் பைஜான் நாட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து Swedish flightradar24 தளத்தில் கூறியதாவது, அவசர நிலைக்கான தகவல் தொடர்பு குறியீடுகளை தொடர்ந்து விமானம் அசர் பைஜான் தலைநகர் பாகுவில் உள்ள ஹெய்டர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடாமல் திரையிறக்கபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாகு விமான நிலையத்தின் பேஸ்புக் பக்கத்தில் 356 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும் சரக்குகள் வைக்கும் பகுதியில் புகை கிளம்பிய காரணத்தினால் இந்த விமானத்தை திடீரென தரையிறங்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் விமானம் பாகுவில் எவ்வளவு நேரம் இருந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.