வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு, மனைவியை அடித்துத் துன்புறுத்திய சீரியல் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்யன் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு அம்பிலி தேவி 4வது மனைவி ஆவார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் குடும்பப் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அப்போது ஆதித்யனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அது தான் கர்ப்பமானதும் தான் தெரிய வந்தது எனவும் அம்பிலி தெரிவித்தார்.
ஆதித்யன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் பெண்ணுக்கு ஏற்கனவே 13 வயதில் குழந்தை இருப்பதாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தான் கள்ள தொடர்பு கொண்டிருக்கும் பெண்ணின் கர்ப்ப கால ஸ்கேன் ரிப்போர்ட்டை பேஸ்புக்கில் ஆதித்யன் வெளியிட்டிருந்தார். இதையடுத்து ஆதித்யன் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும், பரஸ்பர சம்மதத்தின் மூலம் அவரை விவாகரத்து செய்யும்படி கட்டாயப்படுத்துவதாகவும் அம்பிலி போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் தற்போது ஆதித்யன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.