Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வேறு பெண்ணுடன் தொடர்பு” தந்தையை கண்டித்த மகன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூர் கிராமத்தில் லட்சுமணன்(76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் லட்சுமணன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த லட்சுமணனின் மகன் சக்தி தனது தந்தையை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன் அப்பகுதியில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமணனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |