டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை திரைப்படங்களின் வெற்றியை அடுத்து, ஆர்யா நடித்துள்ள படம் “கேப்டன்”. இதில் டெடி படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டுமாக இணைந்து செயல்படுவதால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேப்டன் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இப்படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர்ஆர்யா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “இந்த கதை வேறு யாரும் சொல்லி இருந்தால் கண்டிப்பாக பண்ணியிருப்பேன் என சொல்ல முடியாது. இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனுடன் முன்பு பணிபுரிந்த அனுபவங்களை வைத்து நான் அவரை நம்பினேன். அவரால் இப்படம் இயக்க முடியும் என நினைத்தேன். அதனால் இத்திரைப்படத்திற்கு ஒப்புக்கொண்டேன்” என்று நடிகர் ஆர்யா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.