அரசு மருத்துவர் மது போதையில் முதியவரை தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் 67 மலை கிராமங்கள் உள்ளது. இந்த 67 மலை கிராமங்களுக்கும் பொதுவாக ஏற்காட்டில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மலை கிராமங்களில் அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுவது வழக்கம். இருப்பினும் பெரும்பாலான மக்கள் ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வார்கள். இந்த மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் முதலுதவி மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும். இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அரசு மருத்துவமனைக்கு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த செல்லையா என்ற 70 வயது முதியவரை உறவினர்கள் தூக்கி சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் மது அருந்தியுள்ளார்.
https://shocking-drunk-doctor-creates-ruckus-patients-suffer-at-yercaud-government-hospital-video-goes-viral-408705
அந்த மருத்துவர் முதியவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதோடு நான் மது அருந்தினேனா என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து முதியவரின் பேரன் கௌதம் ஏற்காடு காவல் நிலையத்தில் மருத்துவர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரைக் காக்கும் கடவுளாக மதிக்கப்படும் மருத்துவர் மது குடித்துவிட்டு சிகிச்சைக்காக வருபவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசும் சம்பவம் மிகவும் வேதனையாக இருப்பதாக சிலர் இணையதளத்தில் பரவிய வீடியோவை பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.