Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வேறு வழியில்லாமல் ஹேமந்தை மணந்த சித்ரா”…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

சித்ரா பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பிரபல பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் மூலம் விடுவிக்கப்பட்டார்.

தற்போது ஹேமந்த்தை சித்ரா எப்படித்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டாரோ என விமர்சனம் எழுந்திருக்கின்றது. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை இது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டு இருக்கின்றது. அதில் கூறியுள்ளதாவது, சித்ராவுக்கு போதை, மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் சீரியல்களில் வளர்ந்து வரும் நடிகைகளை அரசியல்வாதிகளுக்கு விருந்ததாக்கும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் கும்பலின் தலைவனுக்கும் ஹேமந்த்துக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் ஹேமந்த்துக்கும் மது, மாது, போதை பழக்கங்கள் இருந்ததாகவும் சித்ராவின் ரகசியங்கள் ஹேமந்த்துக்கும் தெரியவர இது குறித்து ஹேமந்த் வெளியே கூறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சித்ரா விருப்பமில்லாமல் காதலித்து ஹேமந்த்தை திருமணம் செய்து கொண்டதாகவும் ரகசியம் எதுவும் வெளியே சொல்லாமல் இருப்பதற்காக அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |