தமிழ்நாட்டில் அதிகமான ஆர்ப்பாட்டம் செய்வது பாரதிய ஜனதா கட்சி தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் அதிகமான ஆர்ப்பாட்டம் செய்வது பாரதிய ஜனதா கட்சி தான். உங்களுடைய தகவலுக்காக சொல்கிறேன், பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும். எல்லா விஷயத்திலும் மக்கள் பிரச்சினையாக காவிரியிலிருந்து, விவசாய சட்டத்திலிருந்து, அன்றாட பிரச்சினைகள் எல்லாமே கையிலெடுக்கிறோம். கோவில் பிரச்சினையிலிருந்து நம்முடைய ஆலயங்களில் இருந்து… எனவே இயற்கை என்பது மிக முக்கியம் தான், அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
பாரதிய ஜனதா கட்சியில் கூட பார்த்தீர்கள் என்றால்…. சுற்றுச்சூழல் அணி ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. மாசுபடாமல் காப்பாற்ற வேண்டும், அடுத்த தலைமுறைக்கு நாம் இதைக் கொடுக்க வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். நிச்சயமாக இயற்கையின்பால் பாரதிய ஜனதா கட்சி எப்போதும் நிற்கும். தேவைப்படும்போது பாரதிய ஜனதா கட்சி எந்த விதத்தில் செல்வதற்கு தயார்.
அமைச்சர் உண்மையாலுமே லாஜிக் தெரிந்து இருந்தால் அவருடைய ஐஏஎஸ் அதிகாரிகளை எல்லாம் கூப்பிட்டு, என்ன சார் இது அண்ணாமலை வந்து கைடு லைன் என்று சொல்கிறார் ? என்ன அது என்று கேட்டு, அவங்க அதை பாயின்ட் நம்பர் 7ல் படித்துவிட்டு, சார் அவுங்க டெஸ்ட் பாசிட்டிவிட்டி 5% க்கு மேல் இருந்தால் கட்டுப்பாடுகளாமே சார்.
அதான் கம்யூனிஸ்டுகள் ஆளுகின்ற கேரளாவில் கோவிலை திறந்து விட்டார்கள், காங்கிரஸ் – என்.சி.பி ஆளுகின்ற மகராஷ்டிராவில் கோவிலை திறந்துவிட்டார்கள், பிஜேபி ஆளுகின்ற கர்நாடகாவில் கோவிலை திறந்து விட்டார்கள், நம்ம எந்த லாஜிக் படியும் திறக்காமல் இருப்பது தவறு என்று சொன்னா போதும். ஏன் இந்த கோவிலை பூட்டி வைக்கிறார் என்று தெரியவில்லை.
திமுகவிற்கு இது ஒரு பேஷன் ஆக போச்சு. நான் இந்த கோவிலுக்கு போறோம், அந்த கோவிலுக்கு நாங்க தான் சிலை வைத்தோம். மாதமாதம் கோவிலுக்கு போறோம் என்று சொல்கிறார்கள். நீங்கள் கோவிலுக்கு போவதை பற்றி பேசவே இல்லை.சகோதர, சகோதரிகள் கோவிலுக்கு போவது பற்றி தான் நாங்கள் பேசுகிறோம். அதுக்காக கோவிலை திறங்க. உடனே அமைச்சர் சொல்கிறார்… நான் இப்படி தெரியுமா ? அப்படி தெரியுமா ? இப்ப பார்த்தீர்கள் என்கிறார்.
எனவே அமைச்சர் அவர் இந்த கடிதத்தின்படி, லாஜிக் படி பார்த்துவிட்டு, தயவுகூர்ந்து அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். உங்களை தொந்தரவு கொடுப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தயாராக இல்லை, எங்களுக்கு வேண்டாம் என்று நினைக்கிறோம். நீங்கள் பத்து நாட்களில் கோவிலை திறக்கவில்லை என்றால், வேறு வழி இல்லை. நாங்கள் வந்தே தீருவோம். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.