உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியில் தீபாவளிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இஸ்லாமியப் பெண்கள் சிலர் ராமருக்கு சிலை நிறுவி, பூஜை செய்து வழிபட்டுள்ளனர். கடந்த 14 வருடங்களாக ராமரின் படத்தை வைத்து, பூஜை செய்து வந்த இந்த பெண்கள் இந்த வருடம் சிலை நிறுவி, “மஹா ஆரத்தி” எடுத்து, இஸ்லாமியப் பெண் நஸ்னீன் அன்சாரி எழுதிய ஆரத்தி பாடலைப் பாடி வழிபட்டனர்.
இது குறித்து அந்த இஸ்லாமிய பெண்கள் கூறுகையில், ” மக்களாகிய நாம் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையோடு இருப்போம். இது அந்த அனைவருடைய அடையாளம்: என்று கூறியுள்ளனர்.