வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் வள்ளியூர் ஒன்றிய பகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்பி கனிமொழி, நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது போல் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி நிர்வாகிகள் அனைவரும்வேற்றுமையை மறந்து ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அதே போல சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம். அடுத்த கட்டமாக உள்ளாட்சி தேர்தல். இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதால் பெற்றால்தான் அடித்தட்டு மக்களுக்கு நம்முடைய திட்டங்கள் எல்லாம் சென்றடையும். வேறு யாராவது வந்தால், திட்டங்களை அங்கேயே தடுத்து நிறுத்துவார்கள்” என்று பேசியுள்ளார்.