வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பது போன்ற கேள்விகள் அவ்வப்போது நமது மனதை துளைப் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஒருவேளை யாராவது அப்படி நாம் உலகத்தில் வாழ்ந்தால் கூட அவர்களை கண்டு பிடிப்பது நமக்கு சிரமமான காரியம் தான். வேற்றுக்கிரகவாசிகளை நாம் கண்டால் அவர்களை கண்டு பயப்படவேண்டாம்.
ஏனெனில் அவர்களும் தங்களுக்கு தேவையான அனைத்து வளங்களையும் பெற்று தான் அவர்கள் கிராமங்களில் வசித்து வந்திருப்பார். இங்கிருந்து சுரண்டி செல்லும்படியாக எதுவும் அவர்களுக்கு தேவைப்படாது. அதோடு உலகமெங்கிலும் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க புலனாய்வுத்துறை வேற்றுக்கிரகவாசிகள் உலகத்தில் வசிக்கும் சில பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளது. இதைப் பெண்டகன் ஆவணங்களில் பதிவு செய்துள்ளதாகவும் தீ சன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையின் கீழ் இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. (Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues) என்று தலைப்பிடப்பட்ட ஆவணத்தில் இவை குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற வேற்று கிரக வாசிகளால் மனிதர்களுக்கு மத்தியில் 5 பாலியல் சந்திப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் ஒரு பெண் வேற்றுகிரகவாசிகள் கர்ப்பம் அடைந்து இருக்கிறார் என்பதும் இந்த தகவலின் மூலம் தரப்பட்டுள்ளது. அதோடு இந்த தகவல்கள் அனைத்தும் பெண்டகன் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.