Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேற்று சமூக பெண் மீது காதல்…” கோவிலுக்கு வரவழைத்து ஆணவப்படுகொலை”… போலீசார் அதிரடி..!!

கரூரில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவர் மகள் மீனாவை காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே கடந்த ஆறு மாதங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. மீனாவும் ஹரிஹரன் இடம் சரியாக பேசவில்லை என்பதால் ஹரிஹரன் மீனாவை தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

இதனால் பெண் வீட்டார் ஹரிஹரனை கண்டிக்க கோவிலுக்கு வரச் அழைத்துள்ளனர். இதையடுத்து ஹரிஹரன் அங்கு வந்தபோது அங்கு இருந்த உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஹரிஹரனை கல்லால் தாக்கி உள்ளனர். உறவினர் ஒருவர் ஸ்டிக்கர் வெட்டும் கத்தியை எடுத்து அவரை முதலில் முதுகில் குத்தி உள்ளனர். நிலை தடுமாறி விழுந்த ஹரிஹரனை அவர்களே மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரனின் பெற்றோர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் சித்தப்பா, தாய்மாமன், அண்ணன் என நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |