Categories
தேசிய செய்திகள்

வேற்று மத நபரை கரம் பிடித்த பெண் மீது…. உறவினர் நடத்திய துப்பாக்கிசூடு…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் மீது சில பேர் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பி சென்று இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவற்றில் அப்பெண்ணின் கணவரின் சகோதரரே நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. அஞ்சலி வர்மா என்ற அப்பெண் அப்துல் லத்தீப் என்பவரை திருமணம் செய்து உள்ளார். வேற்று மத பெண் என்பதற்காக லத்தீப்பின் சகோதரர் அப்துல் அஜீஸ், அஞ்சலியை தாக்க முடிவுசெய்து இருக்கிறார்.

இதனால் அவருக்கு உதவியாக அவரது நண்பர்களான முகமது ராஜா, ராஜூ மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய பீகாரை சேர்ந்த காலிம் போன்றோர் ஒன்றுகூடி ஆலோசித்துள்ளனர். அதன்பிறகே துப்பாக்கியால் சுடுவது என்ற முடிவுக்கு அவர்கள் வந்து உள்ளனர். இச்சம்பவத்தில் ஜெய்ப்பூர் காவல்துறையினர் நேற்று இரவு அதிரடி வேட்டை நடத்தி தாக்குதல் நடத்தி தப்பிய 3 பேரை கைதுசெய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர் என துணை ஆணையாளர் வந்திதா ராணா கூறியுள்ளார். அத்துடன் தப்பி ஓடிய அபித் என்ற மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |