Categories
மாநில செய்திகள்

“வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு”…. அன்றே கணித்த அஜித்…. வைரல்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆவது, கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வது போன்ற சமூக நீதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கோவில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை குறிப்பிடும் வகையில் நடிகர் அஜித்தின் பில்லா படத்தில் இடம்பெற்ற சேவல் கொடி பாடலை பகிர்ந்து அதனை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக “தமிழன் பேசும் தமிழ்க்குல விளக்கு! வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?” என்ற வரிகள் வரும் பாடல் பகுதியை மட்டும் இணையவாசிகள் பகிர்ந்து பெருமைக் கொள்கின்றனர். மேலும் #அன்னைத்தமிழில்அர்ச்சனை என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Categories

Tech |