விருகப்பக்கம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் காணும் காமெடி நடிகர் மயில்சாமி, வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த கட்சியில் இப்பொழுது பிரச்சினை இல்லை. எல்லா கட்சிக்கும் பிரச்சினை இருக்கு. ஏதோ ஒரு கட்சியில் போய் நாம இருக்கணும்னு இருந்தால் நமக்கு மேல் ஒரு கட்டுப்பாடு இருக்கும். நமக்கு மேல் ஒரு பொறுப்பானவர்கள் இருப்பார்கள், அப்பொழுது தலைமை இருக்கும் .
அதற்க்கு ஒரு தலைவர் இருப்பர். நமக்கு ஒரே தலைவர் எம்ஜிஆர் தான்.அவரை தலைவராக நினைத்ததால் வேறு யாரையும் என்னால் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதாவது ஒரு கட்சியில் போய்ச் சேர்ந்தால் அப்பொழுது அவரை நான் தலைவராக சொல்ல வேண்டும். அதுக்கு இடம் கொடுக்க மாட்டேன். ஒருவேளை வருங்காலத்தில் எம்ஜிஆர் மக்களே சந்தோசாபடுத்தின மாதிரி, ஏதாவது ஒரு கட்சி வந்தால் அந்த கட்சியில் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என்பதற்கு தைரியம் ஒன்றும் அவசியம் கிடையாது. போட்டி பொறாமை இருப்பவர்களுக்கு தான் தைரியம் வேண்டும்.நான் அனைவரிடமும் ரொம்ப அன்பா பழகுறவன், நல்லா பழகுறவன், எனக்கு இந்த பிரச்சனை இல்லை. வீடு வீடாகப் போய் ஓட்டுக் கேட்கப் போகிறோம். மிஞ்சிப் போனால் என்ன டீசல் செலவு, பெட்ரோல் செலவு ஆகப்போகிறது ,கூட வருகின்ற நண்பர்களுக்கு செலவு செய்யணும்.
நான் ஆடம்பரமே இல்லாமல் வரவேண்டும் என்று சொன்னேன். தொடக்கத்திலாவது கொஞ்சம் நீங்கள் செலவுக்கு ஒத்துக் கொள்ளுங்கள் என்று நண்பர்கள் சொன்னார். ஆடம்பரத்தை நான் விரும்பாதவன், நடந்து போய் டீ குடித்து, நடந்துபோய் ஜனங்களைப் பார்த்து, நடந்துபோய் வீட்டுக்கு வருகின்றவன். வெளியில் எங்கேயாவது போவேன் என்றால் காரில் போவேன் என தெரிவித்தார்.