நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கி வருவதால் டாக்டர் படத்தின் விமர்சனம் எப்படி வரப்போகிறது என விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இதனால் இன்று போட்டி போட்டுக்கொண்டு தளபதி ரசிகர்களும் டாக்டர் படத்தை பார்த்து வருகின்றனர். தற்போது டாக்டர் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. மேலும் டாக்டர் படம் சூப்பராக இருப்பதால் கண்டிப்பாக பீஸ்ட் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என தளபதி ரசிகர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.