பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால். இதனைத் தொடர்ந்து அவர் பல சீரியல்களிலும் நடித்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்ஷி அகர்வால் அதற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது .அதோடு அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கின தற்போது இவர் சிண்ட்ரல்லா அரண்மனை3 ,4 சாரி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
அதோடு பிரபு தேவாவின் பஹீரா, நான் கடவுள் இல்லை, புரவி, தி நைட், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் என பல படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சாக்ஷி அகர்வால் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தன்னுடைய தந்தையின் 45 வருட கனவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய தந்தையின் கனவை நனவாக்கிய தால் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.