Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“வேற லெவல்ல இருக்கும் தனுஷின் திருச்சிற்றம்பலம்”…. படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ….!!!!!

தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை மிகவும் நம்பி இருக்கின்றார் தனுஷ்.

இந்த நிலையில் யாரடி நீ மோகினி எனும் வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலமாக ஏழு வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த  இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியாகியிருக்கின்றது. தனுஷின் படம் பல மாதங்கள் கழித்து திரையில் வெளியானதால் ரசிகர்கள் இந்த படத்தின் முதல் காட்சியை காண ஆவலாக இருந்தனர். அதன்படி இந்த படத்தின் முதல் காட்சி ஆரம்ப நிலையில் திரையரங்குகளை  தனுஷ் ரசிகர்கள் திருவிழாவாக மாற்றினார்கள்.

இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த கருத்து ட்விட்டரில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றார்கள். அவர்கள் கூறியுள்ளதாவது, திருச்சிற்றம்பலம் என்ற மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சந்தோஷம், தூக்கம், காதல் பிரிவே இப்படம். இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிட்டத்தட்ட விஐபி பாணியில் படம் வேற லெவலில் இருப்பதாக கூறி வருகின்றார்கள். மேலும் குடும்பத்துடன் படத்தை பார்த்து கொண்டாடலாம் எனவும் தனுஷ் தனது வழக்கமான யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவருக்கும் நித்யா மேனனுக்கும் இடையே கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருப்பதாகவும் கூறி வருகின்றார்கள். இசையை பொறுத்தவரை “பத்தல பத்தல” என்று இருப்பதாகவும் கூறியுள்ளனர். இத்திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

Categories

Tech |