Categories
கிரிக்கெட் விளையாட்டு

வேற லெவல் ஆட்டம்…. குஜராத் அணியை வீழ்த்தி….. ஐதராபாத் அணி அபார வெற்றி….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 24 வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அரை சதம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  அபினவ் மனோகர் 35 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் மிகவும் சிறப்பாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்போது அபிஷேக் சர்மா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி 15 ரன்களில் காயம் அடைந்து வெளியேறினார். கேப்டன் வில்லியம்சன் நிதானமாக ஆடி அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து ஹைதராபாத் அணி 19.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி பெறும் இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |