Categories
கிரிக்கெட் விளையாட்டு

வேற லெவல் ஆட்டம்…… 12 ரன்கள் வித்தியாசத்தில்…. ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி….!!!

ஐபிஎல் போட்டியில் 15வது சீசனின், 12வது சூப்பர் லீக் போட்டியில் நேற்று டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணியும், சன்ரைஸ் அணியும் முதன்முறையாக மோதிக் கொண்டனர். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை  தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து லக்னோ அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய  டி காக் 1  ரன்கள் எடுத்த நிலையில் வாசிங்டன் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

அனுபவ வீரர் மணிஷ் பாண்டே 11 ரன்களில் வெளியேற, லக்னோ அணி 68 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. தொடக்க வீரராக களம் இறங்கி நிலைத்து நின்று விளையாடி அணியின் கேப்டன் ராகுல் , தீபக் ஹூடா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர். தீபக் ஹூடா 51 ரன்னிலும் கேப்டன் ராகுல் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 169 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பிறகு அபிஷேக் சர்மா – ராகுல் திரிபாதி ஜோடி அதிரடியாக விளையாடி வந்தனர். ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்து க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலமாக லக்னோ அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Categories

Tech |