ஆர்.ஆர்.ஆர் படத்தின் நட்பு பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது .
பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி பிரபலமடைந்த ராஜமௌலி தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கி வருகிறார். விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர் . மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
YOUR LOVE IS GENUINE & UNSTOPPABLE… ❤️
50 Million+ Views 🔥🌊 and Trending on @YouTubeIndia#Dosti #Natpu #Priyam
Playlist – https://t.co/jsnMProPVI @mmkeeravaani @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @DVVMovies @RRRMovie #RRRMovie
🎶 on @LahariMusic @TSeries pic.twitter.com/fUPsplDB7Q
— LahaRRRi Music (@LahariMusic) August 16, 2021
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகி வரும் இந்த படம் அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ‘நட்பு’ பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நட்பு பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.