Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்….! “ஆர்.ஜே பாலாஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் “….. எப்போ ரிலீஸ் தெரியுமா….? நீங்களே பாருங்க…!!!

ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் திரைபடத்தின் ஃபர்ஸ்ட் லுக்  நாளை வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

ஆர். ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவர் ”எல்கேஜி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாரா உடன் இணைந்து ”மூக்குத்தி அம்மன்” என்ற பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தார்.பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ என்ற காமெடி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. சுமார் ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.220 கோடி வரை வசூல் செய்தது. தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ‌

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். ‘வீட்ல விசேஷங்க’ என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ஆர் ஜே பாலாஜி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி ப்ரக்னென்ஸி கார்டில் பாஸிடிவ் ஸைன் காட்டும் படத்தை வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Categories

Tech |